எடை குறைத்த அனுபவத்தை புத்தகமாக்கும் அனுஸ்கா

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாகவுள்ள நடிகை அனுஷ்கா ஷெட்டி, உடல் எடையைக் குறைத்த தனது அனுபவத்தைப் புத்தகமாக எழுதியுள்ளார்.

யோகா ஆசிரியையுமான அனுஷ்காவின் உடல் எடை அதிகரிப்பு காரணமாக, பட வாய்ப்புகள் குறைவடைந்தன.

இதன் பின்னர், உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவரின் உதவியுடன் படிப்படியாக அவர் தன் உடல் எடையைக் குறைத்துள்ளார்.

இதனையடுத்து, அனுஷ்கா மற்றும் அவரது உடற்பயிற்சி ஆலோசகரான லுகே கௌன்டின்ஹோ ஆகியோர் இணைந்து, உடல் எடையைக் குறைத்த அனுபவத்தை ஒரு புத்தகமாக எழுதியுள்ளனர்.

Sharing is caring!