எந்திரன்தான் அதிக வசூல் செய்த படம்… பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தகவல்

சென்னை:
எந்திரன்தான்… எந்திரன்தான் அதிக வசூல் செய்த படம் என்று பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எந்திரன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்து இந்திய சினிமாவையே அதிர வைத்த படம். இதுநாள் வரை பாலிவுட் படங்களையே வியந்து பார்க்க, ஒட்டு மொத்த இந்தியாவையும் தமிழ் சினிமாவை நோக்கி பார்க்க வைத்தது எந்திரன்.

இப்படம் வெளிவந்து 8 வருடங்களுக்கு மேல் ஆகின்றது, அப்போதே தமிழகத்தில் எந்திரன் ரூ.104 கோடி வரை வசூல் செய்துள்ளது. அவை இன்றைய டிக்கெட் மதிப்பில் கணிக்கிட்டால் ரூ.185 கோடியை தாண்டுகின்றது.

அப்படி பார்த்தால் பாகுபலி-2வை விட அதிக வசூல் தமிழகத்தில் எந்திரன் தான் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!