எந்த ஒரு நடிகரும் புரியாத சாதனையை விஜய் புரிந்திருக்கிறார்

தமிழ்த் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு நடிகரும் புரியாத சாதனையை விஜய் புரிந்திருக்கிறார். ரஜினிகாந்த் கூட ‘சிவாஜி, எந்திரன், கபாலி, காலா’ ஆகிய நான்கு 100 கோடி வசூல் படங்களைத் தான் கொடுத்திருக்கிறார். ஆனால், விஜய் இதுவரையில் ஐந்து 100 கோடி வசூல் படங்களைக் கொடுத்திருக்கிறார். “துப்பாக்கி, கத்தி, தெறி, பைரவா, மெர்சல்” ஆகிய படங்கள் ஏற்கெனவே 100 கோடி வசூலித்த படங்கள். இப்போது அந்த வரிசையில் 6வது படமாக ‘சர்கார்’ படமும் இணைந்திருக்கிறது.

இரண்டே நாட்களில் ‘சர்கார்’ படத்தின் வசூல் 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, அமெரிக்கா, அரேபிய நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என பல இடங்களில் படத்திற்கான வரவேற்பு முந்தைய விஜய் படங்களை விட மிக அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ரஜினிகாந்த் படங்களின் வசூல் சாதனையையும் முறியடியத்து ‘சர்கார்’ படத்திற்கு இப்படி ஒரு வசூல் கிடைப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தனைக்கும் விமர்சன ரீதியாக பெரிய பாராட்டை ‘சர்கார்’ படம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் தீபாவளித் திருநாளில் படம் வெளிவந்ததால் மக்கள் ஒரு கொண்டாட்ட மனநிலையுடன் படத்தைப் பார்க்க தியேட்டர்களுக்கு வருவதே படத்திற்குக் கிடைத்துள்ள வெற்றி என்கிறார்கள்.

Sharing is caring!