எந்த ஒரு பேட்டியையும் கொடுக்காத ஒரே நடிகர் அஜித்

தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் படங்களைப் பற்றி எந்த ஒரு பேட்டியையும் கொடுக்காத ஒரே நடிகர் அஜித். நடிகைகளில் நயன்தாரா, அவர் படம் சம்பந்தப்பட்ட விழாக்களில் மட்டும் கலந்து கொள்ள மாட்டார். தேவைப்பட்டால் ஒரு சில டிவி பேட்டிகளில் மட்டும் கலந்து கொள்வார்.

தான் நடிக்காத படமான ‘அமரகாவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ஐந்து வருடங்களுக்கு முன்பு கலந்து கொண்டு ஆச்சரியப்படுத்தினார். ஆர்யாவின் தம்பி அந்தப் படத்தின் நாயகன் என்பதாலும், ஆர்யாதான் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் என்பதாலும் அவருக்காக கலந்து கொண்டார்.

மற்றபடி அவர் தனி நாயகியாக நடித்த படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சி எதற்கும் வர மாட்டார். அறம் படம் ரிலீஸான சமயத்தில் மட்டும் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தார். அப்படிப்பட்டவர் தற்போது தெலுங்கில் நடித்து வரும் ‘சைரா’ படத்திற்கான பிரமோஷன் நிகழ்ச்சிகளில் வந்து கலந்து கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளாராம். படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான ராம் சரண் கேட்டுக் கொண்டதால் நயன்தாரா அவரது இத்தனை வருட முடிவை மாற்றிக் கொண்டதாகச் சொல்கிறார்கள்.

‘சைரா’ படம் தெலுங்கில் பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகி வருகிறது. சிரஞ்சீவி நாயகனாக நடிக்கும் இந்தப் படத்திற்கு இந்திய அளவில் பிரமோஷன் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்தப் படத்திற்கு மட்டும் நயன்தாரா அவரது கொள்கையை மாற்றிக் கொள்வாரா அல்லது அது தொடருமா என்பது பின்னர்தான் தெரிய வரும்.

Sharing is caring!