எந்த படத்தையும் திருட்டுத்தனமாக பார்க்காதீங்க… ஹரீஷ் கல்யாண் வேண்டுகோள்

சென்னை:
எந்த படத்தையும் திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்க்காதீர்கள் என்று ஹரீஷ் கல்யாண் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் ஒரு வலம் வருகிறார். இவர் நடித்த இன்பேட் ராஜாவும் இதய ராணியும் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

படம் பார்த்த ரசிகர்கள் டுவிட்டரில் கமெண்ட் செய்ய அவர்களுக்கு ஹரிஷ் கல்யாண் நன்றிகள் தெரிவித்த வண்ணம் உள்ளார். அதில் தான் ஒரு ரசிகர் படத்தை திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துள்ளது தெரியவந்துள்ளது.

உடனே ஹரிஷ் கல்யாண் எந்த ஒரு படத்தை திருட்டுத் தனமாக பார்க்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!