எனக்கும் பாலியல் தொல்லை நடந்துள்ளது… யாஷிகா அதிர்ச்சி தகவல்

சென்னை:
எனக்கும் பாலியல் தொல்லை நடந்துள்ளது என்று கூறி அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளார் பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த்.

யாஷிகா ஆனந்த் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிகம் பிரபலமாகியுள்ளார். அவர் பிரபலமாக இருக்கும் மீடூ பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

திரையுலகில் வாய்ப்பு தேடுபவர்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. நானும் படவாய்ப்பு தேடும்போது பிரபல இயக்குனர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் கொடுத்தார் என கூறியுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆனால் அந்த பிரபல இயக்குனர் யார் என்று அவர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!