எனக்கு கிடைத்த முதல் நல்ல நண்பர் விஷ்ணு

முண்டாசுப்பட்டி படத்தை இயக்கிய ராம்குமார் தற்போது இயக்கியுள்ள படம் ராட்சசன். இந்த படத்தில் விஷ்ணு விஷால், அமலாபால், காளி வெங்கட், முனீஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். அக்டோபர் 5-ந்தேதி இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த படத்தைப் பற்றி அமலாபால் கூறுகையில், இந்தப்படம் திரில்லர் கதையில் உருவாகியிருக்கிறது. ஹாலிவுட்டுக்கு நிகராக நம்ம ஊர் கதையில் தயாராகியுள்ள இந்தப்படம் எனக்கு முக்கியமான படமாக அமைந்துள்ளது. முதலில் கதையை இயக்குநர் என்னிடம் சொன்னபோது சரியாக புரியவில்லை. அதன்பிறகு விஷ்ணு போனில் தொடர்பு கொண்டு அந்த கதையைப் பற்றி சொன்னார், வித்தியாசமாக இருந்தது.

படத்தில் எனக்கான காட்சிகளும் குறைவாக இருந்ததால் இயக்குநர் பற்றி புகார் செய்து கொண்டேயிருந்தேன். விஷ்ணுவிற்கு மிக முக்கியமான படமாக இருக்கும். அவர் எந்த படமாக இருந்தாலும் 100 சதவிகிதம் பிடித்தால் மட்டுமே நடிக்கிறார். ராட்சசன் படத்திற்கு பிறகு விஷ்ணுவின் கேரியரே மாறி விடும்.

இந்த படத்தில் நடித்த போது விஷ்ணு எனது நல்ல நண்பராகி விட்டார். சினிமாவில் எனக்கு கிடைத்த முதல் நல்ல நண்பர்கள் அவர் தான். எந்த விசயமாக இருந்தாலும் முழு ஈடுபாட்டோடு அவர் செயல்படுவது ரொம்ப பிடிக்கும் என்கிறார் அமலாபால்.

Sharing is caring!