எனக்கு திருமணமா? இது எனக்கு செய்தி… பதிலடி கொடுத்த ஸ்ருதி

சென்னை:
அப்படியா… அது எனக்கு செய்தி என்று பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

நடிகைகள் பீக்கில் இருக்கும் போது அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புவார்கள். அதேநேரம் படங்கள் நடிக்காமல் இருந்தால் அவரது திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்க ஆரம்பித்துவிடுவார்கள்.

அப்படி படங்களில் கமிட்டாகாமல் மியூசிக் ஆல்பங்கள் செய்வது, தொகுப்பாளினி என களமிறங்கி வேலை செய்து வருகிறார் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் லண்டனை சேர்ந்த மிசல் என்பவரை காதலித்து வருவது நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இவர்களது திருமணம் இவ்வருடம் நடக்கிறது என செய்திகள் வந்தன, இதுகுறித்து ஸ்ருதிஹாசனிடம் கேட்டாலோ, உண்மையாகவா?, அது எனக்கு செய்தி என அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!