எனக்கு நடந்தது எந்த பெண்ணுக்கும் வரக்கூடாது…? நடிகை பூனம் கவுர்

ஹைதராபாத்: கடந்த 2 ஆண்டுகளாக நான் பட்ட கஷ்டம் வேறு எந்த பெண்ணுக்கும் வரக் கூடாது என்கிறார் நடிகை பூனம் கவுர்.

நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூனம் கவுர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களில் நடித்து வருகிறார் அவர். வெடி படத்தில் விஷாலின் தங்கையாக நடித்தவர்.

அவர் நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் பற்றி தவறாக பேசும் வீடியோ யூடியூபில் வெளியானதுடன் சமூக வலைதளங்களிலும் வெளியானது.

பூனம் கவ்ர்
பவன் கல்யாணுக்கு எதிராக நான் எதுவுமே பேசவில்லை. அப்படி இருக்கும்போது யாரோ வேண்டும் என்றே மார்பிங் செய்து அப்படி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். போலி வீடியோவை வெளியிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி ஹைதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன் என்று பூனம் கூறியுள்ளார்.

போலீஸ்
அந்த வீடியோவுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் ஆன்லைனில் கொடுமைப்படுத்தப்படுவது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என்று பூனம் கவுர் தெரிவித்துள்ளார்.


பெண்
நான் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனுபவித்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கவே கூடாது. சிலர் அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி செய்துள்ளனர். ஒரு பெண்ணின் வாழ்வை நாசமாக்குவது பெரிய தவறு. எனக்கு போலீசார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்கிறார் பூனம்.

நீக்கம்
கசிந்த வீடியோ, அதிர்ச்சி வீடியோ என்ற பெயர்களில் உள்ள என்னை பற்றிய யூடியூப் வீடியோக்கள் நீக்கப்படும் என்று நம்புகிறேன் என்கிறார் பூனம் கவுர். ஆன்லைனில் தன்னை அசிங்கப்படுத்த முயன்றவர்களின் கணக்குகளின் பெயர்களை போலீசாரிடம் அளித்துள்ளார் பூனம்.

Sharing is caring!