எனக்கு ராசியில்லை…கதறும் ஐஸ்வர்யா

பிக் பாஸ் வீட்டில் உள்ள ஐஸ்வர்யா தனது அம்மா, குடும்பம் பற்றி கூறியதை கேட்டு வியக்காமல் இருக்க முடியவில்லை.

பிக் பாஸ் 2 வீட்டில் இருக்கும் ஐஸ்வர்யா தனது குடும்பத்தை எதிர்த்து நடிக்க வந்ததாக கூறினார். சென்னையில் இருக்கும் தான் தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கத்திற்கு செல்வது இல்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில் பிக் பாஸோ ஐஸ்வர்யாவின் அம்மாவை அழைத்து வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

உன் அம்மாவுக்கு உன் மீது பாசம் இல்லை என்று இப்படி பொசுக்கென்று சொல்லிவிட்டாயே என்று யாஷிகா ஐஸ்வர்யாவிடம் கேட்டார். அதற்கு ஐஸ்வர்யாவோ தான் கூறியது உண்மை தான் என்று தெரிவித்தார். தன் அம்மா, குடும்பத்தார் மற்றும் தனக்கிடையே பணம் தான் உறவே தவிர பாசம் இல்லை என்று அவர் கூறியதை கேட்டு இப்படியும் ஒரு குடும்பமா என்று வியப்பாக உள்ளது.

கொல்கத்தா செல்ல என்னிடம் பணம் இல்லாமல் இல்லை. ஆனால் அங்கு சென்றால் எனக்கு பாசம் கிடைக்காது. அவர்களுக்கு தேவை பணம் மட்டுமே என்று மீண்டும் மீண்டும் கூறினார் ஐஸ்வர்யா. எங்கம்மாவுக்கு என் மீது அக்கறையே இல்லை. அவர்கள் என்னை பார்க்க வருவதே இல்லை. எனக்கு பிரச்சனையாச்சு என்று போன் பேசினால் கூட வருவது இல்லை. உனக்கு எங்கிருந்து காசு வரும் என்று என் அம்மா என்னிடம் கேட்பதே இல்லை என்றார் ஐஸ்வர்யா.

மாதாமாதம் நான் அவர்களுக்கு பணம் அனுப்பி வைக்க வேண்டும். அவர்களுக்கு பணம் கிடைத்தால் போதும். அது எப்படி வந்தது என்று விபரம் எல்லாம் தேவையில்லை. நான் பிறந்த பிறகு அப்பாவின் பிசினஸ் போச்சு, அப்பா போயிட்டார், குடும்பம் போச்சு. நான் உங்கள் மகள் அல்ல மகன் என்று அம்மாவிடம் நிரூபிக்க விரும்புகிறேன். அதனால் தான் என் அம்மா இந்த ஷோவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறேன் என்று ஐஸ்வர்யா கூறினார்.

நான் மாதாமாதம் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 40 ஆயிரம் வரை அனுப்பி வைப்பேன். 10ம் தேதிக்குள் பணம் அனுப்பாவிட்டால் பைத்தியம் மாதிரி ஆகி என்னை திட்டுவாங்க. போன் செய்து பிளாக்மெயில் பண்ணுவாங்க. நீ காசு கொடுக்கவில்லை என்றால் நான் வீட்டு வேலைக்காரி வேலைக்கு போவேன் என்று மிரட்டுவாங்க எங்க அம்மா. ஒரு அம்மா இப்படி செய்கிறாரே என்று தான் எனக்கு வருத்தம் என்று ஐஸ் வருத்தப்பட்டுள்ளார்.

தன்னை பாடாய் படுத்தும் அம்மா பிக் பாஸ் வீட்டிற்கு வந்து தான் நன்றாக இருப்பதை பார்க்க விரும்பியுள்ளார் ஐஸ்வர்யா. அதனால் தான் பிக் பாஸ் ஐஸ்வர்யாவின் அம்மாவை அழைத்து வந்துள்ளார். இங்கும் பிக் பாஸ் ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்துள்ளார். ஆனால் இம்முறை அவர் உதவியை யாரும் விமர்சிக்க மாட்டார்கள்

Sharing is caring!