என்ஜிகே படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது… தயாரிப்பாளர் தகவல்

சென்னை:
இறுதிக்கட்டத்தில் உள்ளது… படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

சூர்யா – செல்வராகவன் கூட்டணியில் உருவாகி வரும் படம் என்ஜிகே. இதற்கு அடுத்து சூர்யா இயக்குனர் கே.வி.ஆனந்த் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் மிகுந்த வருத்தத்தில் இருக்கிறார்கள். காரணம் படத்திற்கு அப்டேட் எதுவும் வெளியிடாமல் இருப்பது தான்.
இதனால் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் இயக்குனரையும், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுவையும் பின் தொடர்ந்து அப்டேட் கேட்க இயக்குனரோ மூன்று நாட்களுக்கு ஒருமுறை அப்டேட் விட முடியாது என கூறிவிட்டார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!