என்ஜிகே படப்பிடிப்பு முடிந்தது

கடந்த ஆண்டு தீபாவளிக்கே திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்த படம் என்ஜிகே. செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் பிரீத்சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செல்வராகவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தாமதமாகி வந்தது.

அதனால் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்து நடிக்கத் தொடங்கினார் சூர்யா. அதையடுத்து சூர்யாவுக்காக காத்திருந்தார் செல்வராகவன். இதன்காரணமாக சூர்யாவின் ரசிகர்கள் என்ஜிகே படக்குழுவினரின் இணையப் பக்கத்திற்குள் சென்று படத்தைப்பற்றிய அப்டேட்ஸைக்கேட்டு தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வந்தனர்.

அதையடுத்து செல்வராகவன், யுவன் சங்கர், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோர் அவ்வப்போது சூர்யா ரசிகர்களுக்கு என்ஜிகே படத்தைப்பற்றிய தகவல்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்போது என்ஜிகே படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக

செல்வராகவன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அதோடு சூர்யாவுடனான இந்த பயணம் சிறப்பாக இருந்தது. அவரது அர்ப்பணிப்பு, நடிப்பைப்பார்த்து ஆச்சர்யமடைந்தேன். என்ஜிகே படக்குழு சார்பில் சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Sharing is caring!