என்ஜிகே ரிலீஸ்?

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள படம் என்ஜிகே. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை ட்ரீம்ஸ் வாரியர் எஸ்.ஆர். பிரபு தயாரித்துள்ளார். தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் இந்த படத்தின் டிரெய்லர் காதலர் தினத்தன்று வெளியாகயிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் என்ஜிகே படத்தின் தாமதம் காரணமாக சோர்வில் இருந்து வந்த சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த நிலையில், இதே வேகத்தில் படத்தை தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியிடும் வேலைகளும் துரிதமாக நடந்து வருவதாக படக்குழுவினர் சொல்கிறார்கள். ஆனபோதும் இன்னும் அந்த தேதியை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு உறுதிப்படுத்தவில்லை.

Sharing is caring!