என்டிஆரின் வாழ்க்கை வரலாறு வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தம்

மறைந்த நடிகரும், ஆந்திர முதல்வருமான என்டிஆரின் வாழ்க்கை வரலாறு படம் பிரமாண்டமாக தயாராக உள்ளது. கிரிஷ் இயக்கும் இந்தபடத்தில் என்டிஆரின் மகன் பாலகிருஷ்ணாவுடன் வித்யாபாலன் நடிக்கிறார்.

மேலும், என்டிஆர் நடித்த காலத்தில் அவருடன் நடித்த பல நடிகர் – நடிகைகளின் கதாபாத்திரங்களிலும் இந்த படத்தில் இடம்பெறுகிறது. அதேபோல், நூற்றுக்கணக்கான படங்களை தயாரித்த விஜயா வாஹினி ஸ்டுடியோ நாகி ரெட்டியின் கதாபாத்திரமும் இந்த படத்தில் இடம்பெறுகிறது.

அந்த வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த தகவலை அவர் தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!