என்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா சாலை விபத்தில் பலி

ஐதராபாத்:
கார் விபத்தில் என்டிஆர் மகன் நடிகர் ஹரிகிருஷ்ணா பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணா கார் விபத்தில் காயமடைந்தார். நர்கேட்பள்ளி – அட்டன்கி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த ஹரிகிருஷ்ணா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி கிருஷ்ணா இறந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  முன்னாள் எம்.பி.,யான இவர் ஆந்திர முன்னாள் முதல்வர் என்டிஆர்.,ன் மகனும், நடிகர் ஜூனியர் என்டிஆரின் தந்தையும் ஆவார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!