என்டிஆர் வாழ்க்கை வரலாறு படத்தில் பால்காரியாக நடிக்கிறாரா ரகுல்ப்ரீத் சிங்?

ஐதராபாத்:
பால்காரி… அடுத்த படத்தில் பால்காரி கேரக்டரில் நடிக்கிடிறார் ரகுல்ப்ரீத் சிங் என்று விபரமறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

நடிகை ராகுல் ப்ரீத் தற்போது தமிழில் பிஸியான நடிகையாகிவிட்டார். தீரன் படம் ஹிட் ஆன பிறகு ஏகப்பட்ட படவாய்ப்புகள் குவிந்தது. தற்போது 2 தமிழ் படங்கள், 2 தெலுங்கு படங்கள் மற்றும் ஒரு இந்தி படத்தில் அவர் நடித்து வருகிறார்.

பிரபல நடிகர் என்டிஆரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஒரு முக்கிய ரோல் நடிக்க அவரை அணுகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இயக்குனர் கிரிஷ் இயக்கும் இந்த படத்தில் பாலகிருஷ்ணா என்டிஆராக நடிக்கிறார். பாலிவுட் நடிகை வித்யா பாலன் அவருக்கு மனைவியாக நடிக்கிறார்.

இதில் ரகுல் ப்ரீத் சிங் பால்காரி வேடத்தில் இளம் வயது என்டிஆரை காதலிப்பவராக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் இந்த படத்தை ஒப்புக்கொள்வார் என்கிறார்கள்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!