என்னப்பா… நடக்குது… மர்மமா இருக்குது… ஒன்றுமே புரியலையே!

சென்னை:
என்னப்பா… நடக்குது உள்ளே இருக்கும் போது ஒரு மாதிரியும் வெளியே வந்த பின்னாடி வேறு மாதிரியும் பேசுறாங்க. இவங்க நல்லவங்களா? இல்ல கெட்டவங்களா?

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகர் பாலாஜியின் மனைவி நித்யா வெளியேற்றப்பட்டார். அவர்கள் இருவரும் மீண்டும் நெருக்கமாகவே இருந்தனர். அதனால் இருவருக்குமான பிரச்சனை முடிந்துவிட்டது என்பது போல தெரிய வந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு பேட்டியில் நித்யா கூறுகையில், “இன்னும் பிரச்னை அப்படியே தான் இருக்கிறது. ஆறு ஏழு வருஷமாக கஷ்டத்தை அனுபவித்த நான் எப்படி ஒரே மாதத்தில் மாறிவிடுவேன். போஷிகா பேசியது அவளாக பேசியது இல்லை.. அவளை அப்படி பேசவைத்துள்ளார்கள் பிக்பாஸ் டீம். நான் பேசியதை கூட எடிட் செய்துவிட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

“நீ உள்ளே இருக்கிறதுதான் எனக்கும் நல்லது. போய் விவாகரத்து தொடர்பான நீதிமன்ற வேலைகளை முடிச்சிடுறேன்!” என்று தான் பாலாஜியிடம் கூறிவிட்டு வந்தாராம். என்னப்பா… நடக்குது…!

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!