என்னை ஆபாசமாக விற்க முயற்சி- அமலாபால் கவலை

ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்க வேண்டும். என்னை மாமிசத் துண்டு போல கருதி வியாபாரம் செய்ய முயற்சி நடந்தது’ என நடிகை அமலாபால் அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளார்.

மலேசிய கலை நிகழ்ச்சிக்காக நடந்த நடனப் பயிற்சியின் போதுதொழில் அதிபர் அழகேசன் என்பவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலாபால், சமீபத்தில் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அழகேசனை கைது செய்தனர். பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது தைரியமாக புகார் அளித்ததற்காக அமலாபாலுக்கு, நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் விஷால்  உள்ளிட்டோர் பாராட்டு தள்ளினர்.

இந்நிலையில், அமலாபால் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார், “எனக்கு நேர்ந்த பிரச்னையில் நடிகர் விஷால் ஆதரவாகவும் பக்கபலமாகவும் நின்றதற்கு நன்றி. ஒவ்வொரு பெண்ணும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து நிற்பது அவர்கள் கடமையாகும். என்னை மாமிச துண்டு போன்று வியாபாரம் செய்ய அந்த நபர் முயன்றார். மலேசியாவில் உள்ள தொழில் அதிபர் கொடுக்கும் விருந்தில் கலந்து கொள்ளும்படி அந்த நபர் தொந்தரவு கொடுத்ததார். அவருடையை நடவடிக்கை எனக்கு எரிச்சலை ஏற்படுத்தியது” என நடிகை அமலாபால் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Sharing is caring!