என்னை ஏமாற்றி விட்டனர்… டுவிட் போட்ட நடிகர் நட்டி

சென்னை:
என்னை ஏமாற்றி விட்டனர் என்று ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்ராஜ் டுவிட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் ஒளிப்பதிவாளராக அதிகம் பிரபலமானவர் நட்ராஜ். இவர் சதுரங்க வேட்டை உட்பட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்நிலையில் நட்ராஜ் திடீரெனெ டுவிட்டரில் தான் ஏமாற்றப்பட்டுவிட்டதாக அதிர்ச்சி குற்றச்சாட்டு கூறியுள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் ஜீவா படத்தில் ஒரு பாடலில் நடித்தது பற்றி குறிப்பிட்டு என்னை இயக்குனர் சுசீந்திரன் மற்றும் மேனேஜர் ஆண்டனி ஆகியோர் ஏமாற்றிவிட்டனர் என தெரிவித்துள்ளார். வேறு எந்த விவரத்தையும் வெளியிடவில்லை.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!