“என் குடும்பத்துக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி” – இயக்குனர் அமுதன் தகவல்

சென்னை:
“என் குடும்பத்துக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி” என்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சி.எஸ். அமுதன். எதற்காக தெரியுங்களா?

இயக்குனர் சி.எஸ்.அமுதனின் தமிழ்படம் 2 ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பை பெற்றது. டாப் ஹீரோக்கள் முதல் அரசியல் பிரபலங்கள் வரை அனைவரையும் இந்த படத்தில் ட்ரோல் செய்து கலாய்த்து எடுத்து விட்டனர்.

சி.எஸ்.அமுதனுக்கு பிறந்தநாள் என்பதால் அவர் குடும்பம் அவருக்கு ஒரு கேக் செய்து கொடுத்துள்ளனர். அதில் “உலகம் அதிர வைக்கும் பீனிக்ஸ் பறவைக்கு பிறந்த நாள் வாழ்த்து” என அந்த கேக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

அதை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் “என் குடும்பத்துக்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி” என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!