என் பாட்டுக்கு அவர் பெயரை போட்டுக் கொண்டார்… வைரமுத்து பற்றி இளம் பாடகர் குற்றச்சாட்டு

சென்னை:
என் பாட்டுக்கு அவர் பெயரை போட்டுக் கொண்டு விட்டார் வைரமுத்து மீது சரமாரியாக குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார் இளம் பாடகம் கார்த்திக் நேதா. இந்த விவகாரம் தான் தற்போது பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது.

வாகை சூடவா படத்தில் சர சர சார காத்து வீசும்போது பாடலுக்காக வைரமுத்து பல விருதுகளை வாங்கினார். இப்படத்திற்கு தேசிய விருதும் கிடைத்தது. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது முதல் படம். படத்தின் பாடல்களை வைரமுத்துவும், கார்த்திக் நேதாவும் எழுதியிருந்தனர்.

இதில் வைரமுத்து எழுதியதாக வெளியான சர சர சார காத்து வீசும் போது பாடல் பல விருதுகளையும், உயரிய அங்கீகாரங்களையும் பெற்றுத் தந்தது. தற்போது இப்பாடல் வைரமுத்து எழுதியதல்ல, கார்த்திக் நேதாதான் எழுதியது என்று தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் நேதாவிற்கு போறானே ..போறானே பாடலுக்கு மட்டும் அவர் பெயர் போடப்பட்டுள்ளது. தற்போது 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாசிருக்கான விருதை கார்த்திக் நேதா, 96 படத்துக்காக பெற்றிருக்கிறார். பின்னர் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:

சர சர சார காத்து பாடலையும் நான் தான் எழுதினேன். அதன் வரிகளை மட்டும் மேலும் கீழுமாக மாற்றி தனது பெயரில் வெளியிட செய்தார் வைரமுத்து.  “தம்பி நீங்க எழுதினது தான், ஆனா சார் கொஞ்சம் சேஞ்ச் பண்ணி அவர் பேர போட சொல்லிட்டார், சாரி தம்பி என தயாரிப்பாளர் அழைத்து வருத்தம் தெரிவித்தார்.

இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கும் இந்த திருட்டு தெரியும். ஆனால் அது அவரது முதல் படம், அவரால் எதுவும் சொல்ல முடியவில்லை. என் பாடல் திருடப்பட்டதும் இல்லாமல், அது பல விருதுகளை வாங்கி குவிக்கும் போதும், மக்கள் இந்த பாடலை கொண்டாடும் போதும் இந்த கலைஞனின் நிலையை சற்று நினைத்து பாருங்கள். அவர் மனது எப்படி துடித்திருக்கும். யாரிடம் சொல்ல முடியும். யார் நம்புவார், அந்த இறைவனை தவிர. இவ்வாறு வேதனையுடன் குற்றம்சாட்டி உள்ளார் அவர்.

இதுதான் தற்போது பெரும் புகைச்சலை கிளப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!