என் மீது மரியாதை வைத்துள்ளவர்தான் முருகதாஸ்… பாக்யராஜ் சொல்றார்

சென்னை:
என் மீது மரியாதை வைத்துள்ளவர்தான் இயக்குனர் முருகதாஸ் என்று இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

சர்கார் கதை சர்ச்சையை தொடர்ந்து நடிகர் பாக்யராஜ் தற்போது எழுத்தாளர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த சர்ச்சை பற்றி அவர் ஒரு பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

“வருண் ஏன் கோர்ட்டுக்கு வெளியில் வந்து விஜய்யின் அப்பா எஸ்ஏசிக்கு நன்றி கூறினார் என தெரியவில்லை. நான் அவருக்கு சொல்லிக்கொடுத்தது வேறு, ஆனால் வருண் மீடியா முன்பு வேறு எதோ பேசிவிட்டார்”.

முருகதாஸ் தன்னை எப்போது நேரில் பார்த்தாலும் காலில் விழுந்து வணக்கும் அளவுக்கு என் மீது மரியாதை கொண்டவர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!