என் வாழ்க்கையில் மறக்க முடியாத பாடல்… பாராட்டினார் அஜித்

சென்னை:
‘கண்ணான கண்ணே’ பாடல் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடலா இருக்கும்” என்று அஜித் பாராட்டியதாக இமான் தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித் நடித்த விஸ்வாசம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இரண்டாவது வாரத்தை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த படத்திற்கு இசையமைத்த இமான் தற்போது அஜித் விஸ்வாசம் பாடல்களை கேட்டுவிட்டு என்ன சொன்னார் என தெரிவித்துள்ளார்.

பாடல்கள் அனைத்தையும் கேட்ட அஜித் இமானுக்கு போன் செய்தாராம் “எனக்கு என்ன சொல்றதுனே தெரியலை. அதுக்கான தகுந்த வார்த்தை என்கிட்டே இல்லை. ரொம்ப நன்றி சார். ‘கண்ணான கண்ணே’ பாடல் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாத பாடலா இருக்கும்” என கூறினாராம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!