என் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்கள் வரும்

சென்னை:
என் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்களும் இசையும் என்னுடனே வந்துகொண்டிருக்கின்றன. இளையராஜா சார் பாடல்களைக் கேட்காமல், ஒருநாள் கூட நான் இருந்ததே இல்லை என்று இயக்குனர் ஷங்கர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில், கடந்த 02 மற்றும் 3-ம் தேதி இளையராஜா 75 எனும் பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் நாள் இசை நிகழ்ச்சியும், மறுநாள் இளையராஜாவுக்குப் பாராட்டு விழாவும் நடந்தது.

பாராட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குநர் ஷங்கர் பேசியதாவது:
என் வாழ்வின் எல்லாத் தருணங்களிலும் இளையராஜாவின் பாடல்களும் இசையும் என்னுடனே வந்துகொண்டிருக்கின்றன. இளையராஜா சார் பாடல்களைக் கேட்காமல், ஒருநாள் கூட நான் இருந்ததே இல்லை.

என்னுடைய முதல் படமான ‘ஜென்டில்மேன்’ படத்துக்கு ராஜா சாரிடம் செல்லவேண்டும் என்றுதான் ஆசைப்பட்டேன். அவரை சந்திக்கவும் நேரம் வாங்கிவிட்டேன். ஆனால் எனக்கொரு பயம் இருந்துகொண்டே இருந்தது. அவரிடம் வேலை பார்க்கப் பயமாக இருந்தது.

இளையராஜா சாருடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பும் கிடைத்தது எனக்கு. அரசின் விளம்பரப் படம் ஒன்றைப் பண்ணினேன். அதற்கு ராஜா சார் இசையமைத்தார். அது வருமானவரி விழிப்புணர்வுப் படம். கமல் சார்தான் நடித்துக் கொடுத்தார். என் வாழ்நாள் முழுக்க, ராஜா சாரின் இசை, தொடர்ந்துகொண்டே இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!