எப்படி? இது யார் என்று தெரிகிறதா? டுவிட் போட்ட கஸ்தூரி

சென்னை:
யார் என்று தெரிகிறதா என்று தான் அடுத்து நடிக்க உள்ள படத்தில் கெட்டப் போட்டோவை வெளியிட்டு கேள்வி கேட்டுள்ளார் கஸ்தூரி.

80, 90களில் பிசியாக நடித்து வந்தவர் நடிகை கஸ்தூரி. சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.

தற்போதும் பல படங்களில் கவர்ச்சி வேடம், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவ்வப்போது சமூகத்தில் நடக்கும் அநியாயங்களுக்கு தனது குரலை வலுவாக கொடுத்து வருகிறார்.

இந்நிலையில் தான் நடிக்கும் அடுத்த படத்தின் கெட்டப்பை வெளியிட்டு யார் இது என கேள்வியை கேட்டுள்ளார். இது நீங்கள் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!