எப்படி நான் எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன்?

பேட்ட படத்தில் நடித்து முடித்துள்ள ரஜினிகாந்த், கடந்த 3-ந்தேதி ஷங்கர் இயக்கத்தில் நடித்துள்ள 2.0 படத்தின் டிரைலர் விழாவில் கலந்து கொண்டார். இப்படம் இம்மாதம் 29-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் 2.0 தொடர்பாக டிவி ஒன்றுக்கு பேட்டியளித்தார் ரஜினி.

எளிமையான வாழ்க்கை வாழ்வது பற்றிய கேள்விக்கு அவர் அளித்த பதில், நான் எளிமையான வாழ்க்கை வாழ்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். ஆனால் நான் போயஸ் கார்டனில் வசிக்கிறேன். பிஎம்டபிள்யூ காரில் செல்கிறேன். 5 அல்லது 7 நட்சத்திர ஹோட்டல்களில் தான் யாரையும் சந்திக்கிறேன், சாப்பிடுகிறேன். அப்படியிருக்க எப்படி நான் எளிமையான வாழ்க்கை வாழ்கிறேன் என்று சொல்ல முடியும். ஒருவேளை உடையை வைத்து அப்படி சொல்கிறார்கள் என நினைக்கிறேன் என்றார்.

Sharing is caring!