எமி ஜாக்சன் தாயாகிறார்

மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான எமி ஜாக்சன் தான் கர்ப்பமாக உள்ளதாக அவரது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

லண்டனில் தொழிலதிபராக இருக்கும் ஜோர்ஜுடன் இருக்கும் புகைப்படத்தை, புத்தாண்டு தினத்தில் பதிவிட்டிருந்தார்.

இதேவேளை, 2019ஆம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கியிருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி என இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ள எமி ஜாக்சன், காதலர் தன்னை முத்தமிடும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடைபெறும் எனவும் செய்திகள் வெளியாகிய நிலையில், தான் கர்ப்பமாக இருப்பதாக இன்ஸ்டகிராம் பக்கத்தில் எமி பதிவிட்டுள்ளார்.

இதை கூரையின்மீதேறி கத்திக்கூற வேண்டும். இன்று அன்னையர் தினம் என்பதால், இதைவிட சிறந்த தருணம் இருக்கமுடியாது. இந்த உலகத்தில் எதைவிடவும் உன்னை மிக அதிகமாக நான் நேசிக்கிறேன். உண்மையான, தூய்மையான அன்பு. நமது குட்டி லிப்ராவைச் சந்திக்கப் பொறுமையின்றிக் காத்திருக்கிறோம்” எனவும் பதிவிட்டுள்ளார்.

லண்டனைச் சேர்ந்த இவர் தாண்டவம், ஐ, தங்கமகன், கெத்து, தெறி, தேவி மற்றும் 2.0 ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!