எம்.ஜி. ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் முதல்வரால் திறந்து வைப்பு

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு  திரைப்பட பணியாளர்கள் கூட்டமைப்பு பெப்சி கட்டியுள்ள படப்பிடிப்புத் தளத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல திரைத்துறையினரும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் திரைப்பட பணியாளர் கூட்டமைப்பான பெப்சி ,காஞ்சிபுரம் பையனூரில் 15 ஏக்கரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா படப்படிப்பு தளத்தை கட்டியுள்ளது. இந்தியாவிலேயே மிக உயரமான  இந்தப் படப்பிடிப்புத் தளமான இதன் உயரம் 56 அடியாகும். அதிநவீன வசதிகள் இந்தப் படப்பிடிப்பு தளத்தில் இடம்பெற்றுள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 5 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்புத் தளத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் பங்கேற்றனர்.

Sharing is caring!