எல்இடி கட்அவுட்டில் அலங்கரிக்கப்பட்ட அஜித்… மின்னுகிறது!!!

சேலம்:
சேலம் அஜித் ரசிகர்கள் அமர்க்களம் செய்துள்ளனர். என்ன விஷயம் தெரியுங்களா?

எல்.இ.டி கட்அவுட்டில் அலங்கரிக்கப்பட்ட அஜித்தின் விஸ்வாசம் பேனர் மின்னல் போன்று ஜொலிக்கிறது. இன்று 10ம் தேதி சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதற்காக அஜித்தின் ரசிகர்கள் டிக்கெட்களை முன்பதிவு செய்து அஜித்தை திரையில் காண வெய்ட்டிங்கில் காத்திருக்கின்றனர். இத்திரைப்படம் கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

அஜித்தின் ரசிகர்கள் விஸ்வாசம் வெளியாகும் திரையரங்குகளில் பேனர்களாலும் கட் அவுட்களாலும் அலங்கரித்துள்ளனர்.  இதில் ஒருபடி மேலாக சேலம் ஓமலூரில் அஜித்திற்கு “எல்.இ.டி” கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. அதில் விஸ்வாசம் படத்தின் போஸ்டர்கள் மாறி, மாறி வரும்படி செய்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!