எல்கேஜி இயக்குனருக்கு கிடைத்த அதிர்ஸ்டம்

எல் கே ஜி படத்தின் வெற்றிக்காக உழைத்தவர் என பாராட்டி இயக்குனருக்கு புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் .

ஆர்ஜே பாலாஜி நடிப்பில் திரைக்கு வந்த திரைப்படம் எல்கேஜி. இப்படத்தை கே ஆர் பிரபு இயக்கினார் . மேலும் இப்படத்தில் ப்ரியா ஆனந்த், மயில் சாமி , நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை குவித்து வருகிறது. மேலும் அரசியல் நய்யாண்டியான இந்த படத்தின் கதையை ஆர்.ஜே பாலாஜி மற்றும் அவரின் நண்பர்கள் இண‌ந்து இயற்றினர்.

இந்நிலையில் எல்கேஜி படத்தை வெற்றி படமாக இயக்கிய இயக்குனரை பாராட்டும் விதமாக இயக்குனர் பிரபுவிற்கு தயாரிப்பாளர்  ஐசரி கணேஷ் புதிய கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

Sharing is caring!