எல்கேஜி படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்த கபில்தேவ்

சென்னை:
எல்கேஜி படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ்.

ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வரும் 22 ம் தேதி எல்கேஜி படம் வெளியாகவுள்ளது. போஸ்டர் வந்த நாள் முதல் இப்போது வரை படத்திற்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இப்படத்தில் அவருடன் பிரியா ஆனந்த் நடித்துள்ளார். அண்மையில் வந்த டிரைலர் படத்தின் மீதான ஆசையை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்க செய்துள்ளது. படத்தில் இன்னும் யாரையெல்லாம் பாலாஜி கலாய்த்துள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் முன்னாள் கேப்டனும், பிரபல கிரிக்கெட் வீரருமான கபில்தேவ் இப்படத்திற்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!