எல்லைகளைத்தாண்டி கீழ்த்தரமாக நடக்கும் நடிகை. வழக்குத் தொடரும் நிலையில் இயக்குனர்

ஸ்ரீரெட்டி தனது எல்லைகளை தாண்டி கீழ்த்தரமாக நடந்து கொண்டிருக்கிறார் என இயக்குனர் வாராகி கூறியிருக்கிறார்.

முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

ஆனால், ஸ்ரீரெட்டி திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் கடும் கோபமடைந்த ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப்போகிறேன்.. அதற்கு நீ தகுதியானவன்தான்” என குறிப்பிட்டிருந்தார். மேலும் தன்னை வாராகி மிரட்டுவதாக ஸ்ரீரெட்டி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் மீது புகார் அளித்துள்ளார்.
varaki
இந்நிலையில் ஸ்ரீரெட்டிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இயக்குனர் வாராகி என்னை ஸ்ரீரெட்டி சமூகவலைதளத்தில் அவதூறான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். அடிப்பேன் என்றும் மிரட்டியுள்ளார்.

நான் பெண்களை மதிப்பவன். நடிகைகள் பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு செல்வதாக பேசி வீண் விளம்பரத்தை அவர் தேடிக்கொள்கிறார். தன்னை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டி மிரட்டி வரும் ஸ்ரீரெட்டி மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர உள்ளேன் என வாராகி கூறியிருக்கிறார்.

Sharing is caring!