ஏகன் படத்தில் சிவகார்த்தி நடித்த ஸ்டில் வெளியீடு

சென்னை:
அஜித்துடன் சிவகார்த்திகேயன் நடித்த படத்தில் இருந்து ஒரு ஸ்டில் தற்போது வெளியாகி உள்ளது.

அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம். இவரை ரோல் மாடலாக வைத்து பலரும் முன்னேறி வருகின்றனர். இப்படி அஜித்தை ரோல் மாடலாக கொண்டவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் திரையில் முதன் முதலாக தோன்றிய படம் ஏகன் தான். அது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அப்போது அஜித் சாரிடம் ஒரு புகைப்படம் கூட சிவகார்த்திகேயன் எடுத்தது இல்லையாம். அது நினைத்து பல முறை வருத்தப்பட்டுள்ளார்.
தற்போது புகைப்பட கலைஞர் சிற்றரசு ஒரு பேட்டியில் அந்த புகைப்படத்தை காட்டியுள்ளார்.

அந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!