ஏன் இப்படி சொன்னார்கள்… அர்ஜுன் மீதான குற்றச்சாட்டில் இயக்குனர் பதில்

சென்னை:
மீ டூ வில் தற்போது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியுள்ள குற்றச்சாட்டு அனைவரையும் அதிர விட்டுள்ளது.

அனைத்து மொழி சினிமா துறையில் இப்போது ஒரே ஒரு பிரச்சனை வெடித்திருக்கிறது. MeToo என்ற விஷயம் தான், ஒரு பெண் பிரபலம் ஆரம்பிக்க அடுத்தடுத்து நடிகைகள் தங்களுக்கு நடந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதில் தற்போது சிக்கியவர் அர்ஜுன், ஸ்ருதி ஹரிஹரன் என்ற நடிகை தான் புகார் கூறியுள்ளார். இருவரும் நிபுணன் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த போது இப்பிரச்சனை நடந்துள்ளது. அர்ஜுன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹரிஹரன்.

அர்ஜுன் மீது வந்த குற்றச்சாட்டு கூறித்து அப்பட இயக்குனர் தெரிவித்துள்ளதாவது:

அர்ஜுன் மிகவும் நல்ல மனிதர், இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். ஸ்ருதி கூறியிருப்பது எனக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்பட பட காதல் காட்சிகள் எழுதும் போதே அர்ஜுன் எனக்கு மகள்கள் இருக்கிறார்கள் மிகவும் நெருக்கமான காட்சிகள் நடக்க முடியாது, கொஞ்சம் காட்சிகளை மாற்றுங்கள் என்று கூறியிருந்தார்.

அவ்வளவு மரியாதையான மனிதர் அவர், ஸ்ருதி குறிப்பிட்ட விஷயம் போல் எனக்கு நடந்ததாக தெரியவில்லை. அர்ஜுன் அவர்கள் அப்படிபட்டவரும் இல்லை என ஒரு பெரிய பதிவு போட்டுள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!