ஏன் திருமணம் செய்யவில்லை? 31 வயதாகும் நடிகை சார்மி..!!

நடிகை சார்மி நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்த அவர் தற்போது முழுவீச்சில் சினிமா தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார்.

இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கும் iஸ்மார்ட் ஷங்கர் படத்தினை அவர் தயாரிக்கிறார். சமீபத்தில் 31வது பிறந்தநாளை கொண்டாடிய அவரிடம் திருமணம் எப்போது என கேட்டதற்கு அவர் அளித்துள்ள பதில் பலருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.

“இப்போதைக்கு சினிமாவில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். என் வாழ்க்கையில் மற்றவர்களை prioritise செய்ய முடியாது. கணவர், குழந்தைகள் என நேரம் ஒதுக்கி என்னால் பார்த்துக்கொள்ளமுடியாது,” என அவர் கூறியுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு த்ரிஷாவை திருமணம் செய்ய ப்ரொபோஸ் செய்திருப்பதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினார் சார்மி என்பது உங்களுக்கு நினைவிருக்கலாம்.

Sharing is caring!