ஏன் யாஷிகாவை வெளியேற்றலை… ரசிகர்கள் கண்டனம்

சென்னை:
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா வெளியேற்றப்படாமல் இருந்ததற்கு கடும் கண்டனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி வார இறுதியில் கமல்ஹாசன் வந்தால் தான் இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்கிறது என்பது தான் நிலை. டாஸ்க் என்ற பெயரில் ஒரே கூச்சல் தான் இருக்கிறது என பலரின் எண்ணம்.
இந்நிலையில் நிகழ்ச்சி 4 வாரங்களை கடந்து விட்டது.

இதில் மமதி, அனந்த் வைத்ய நாதன், நித்யா என அடுத்தடுத்த வாரங்களில் தொடர்ச்சியாக வெளியேறினர். இதில் இந்த வாரம் நித்யாவும் வெளியேறி விட்டார். இவருடன் பொன்னம்பலம், பாலாஜி, யாஷிகா என மூவரும் எவிக்சனுக்கு நாமினேசன் செய்யப்பட்டார்கள்.

ஆனால் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால் நிகழ்ச்சியில் முடிவு அறிவிக்கப்படும் முன் வரை யாஷிகா வெளியேறப்போகிறார் என்பது போல காண்பிக்கப்பட்டு. அவரது தோழியாக ஐஸ்வர்யா அழுதார்.
பின் முடிவு மாறிப்போனது. தற்போது யாஷிகா காப்பாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!