ஏப்ரலில் பிரபாஸின் புதிய படம் ஆரம்பம்

பாகுபலி-2 படத்தை அடுத்து சாஹோ படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு துபாயில் நடைபெறுகிறது. பிப்ரவரி இறுதியில் அங்கு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஏப்ரல் மாதம் 20-ந்தேதி வரை நடைபெறுகிறது. மேலும், துபாயில் ஆக்சன் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட உள்ளதாம்.

அதையடுத்து பிரபாஸ் இந்தியா திரும்பியதும், ஏப்ரலில் கடைசி வாரத்தில் அவர் நடிக்கும் அடுத்த படம் தொடங்கப்பட உள்ளது. ராதாகிருஷ்ணா இயக்கும் அந்த படத்தின் கதைக்களம் ஐரோப்பாவில் அமைந்துள்ளதாம். அதனால் பெரும்பகுதி படப்பிடிப்பை அங்குதான் நடத்தப்போகிறார்களாம். இந்த படத்தை இயக்கும் ராதாகிருஷ்ணா தெலுங்கில் கோபிசந்த் நடித்த ஜில் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர்.

Sharing is caring!