ஏலத்தில் கே.பாலசந்தரின் வீடு, அலுவலகம்

மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் வீடும், அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.

நாடகத்திலிருந்து சினிமாவுக்கு வந்து பல வெற்றிப்படங்களை கொடுத்து, ‘இயக்குநர் சிகரம்’ எனக் கொண்டாடப்பட்டவர் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தர். அவரின், சொந்தப் படத்தயாரிப்பு நிறுவனமான கவிதாலயா நிறுவனம் கே.பாலசந்தர் இயக்கிய பல படங்களையும், மற்ற இயக்குநர்களை வைத்தும்  படங்களையும் தயாரித்துள்ளது. ரஜினியின் ‘சிவா’, ‘அண்ணாமலை’, கமல்ஹாசனின் ‘உன்னால் முடியும் தம்பி’, விக்ரமின் ‘சாமி’ போன்ற படங்களை கவிதாலயா நிறுவனம் தயாரித்திருக்கிறது. கே.பாலசந்தரின் மறைவுக்குப் பிறகு அவரின் மகள் புஷ்பா கந்தசாமி கவிதாலயா நிறுவனத்தை நிர்வகித்து வந்தார்.

இந்நிலையில், மயிலாப்பூர் வாரன் சாலையில் இருக்கும் கே.பாலசந்தரின் வீடும், அதேபகுதியில் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே இருக்கும் கவிதாலயா அலுவலகமும் ஏலத்துக்கு வருகிறது.

நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாளில் இந்த அறிவிப்பு வெளிவந்திருக்கிறது. யூகோ வங்கியில் ஒரு கோடியே 36 லட்சம் கடன் பணம் செலுத்த முடியாமல் போனதால் கே.பாலசந்தரின் கவிதாலயா பு

Sharing is caring!