ஐக்கிய அரபு எமிரேட்சில் வசூலில் முதலிடம் பிடித்த 2.0 படம்

சென்னை:
லேட்டாக வந்தாலும் நான் எப்போதும் லேட்டஸ்ட்தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளார் நடிகர் ரஜினி.

சூப்பர்ஸ்டாரின் 2.0 படம் தான் தமிழ் சினிமாவில் முதல் 500 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது. இந்த படத்தின் வசூல் வேட்டை பல இடங்களிலும் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் 2.0 படத்தில் முதல் வார வசூல் விவரம் அதிகாராப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதில் 2.0 படம் 17 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து முதல் இடத்தில உள்ளது.

மற்ற ஹாலிவுட் படங்கள் இந்த வசூலை நெருங்க கூட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!