ஐயோ வேண்டாம்… அலறிய சென்ட்ராயன்…!

சென்னை:
ஐயோ வேண்டாம்மா… வேண்டாம் என்று அலறி உள்ளார் சென்ட்ராயன். எதற்காக தெரியுங்களா?

பிரபல தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி ஒருவழியாக முடிந்துவிட்டது. போட்டியாளர்கள் அனைவரும் பிரபலமாகிவிட்டனர். படங்களிலும், நிகழ்ச்சிகளிலும் வரத்தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் சென்ட்ராயன் அதே தொலைக்காட்சியின் மற்றொரு காமெடி நிகழ்ச்சிக்கு விருந்தினராக சென்றார்.

அதில் நாஞ்சில் விஜயன் இந்த பொண்ணு ஓகேவா என்று அவருடைய பெண் வேடத்தை காண்பித்தார். சென்ட்ராயன் வேண்டாம் என்றதும் அடுத்தடுத்து ஐஸ்வர்யா புகைப்படத்தை காண்பித்து ஓகேவா என்றதும் அய்யோ அம்மா வேணாம் என்று பதறி விட்டார். யாஷிகா என்றதும் ஓகே என்கிறார்.

எல்லாம் பிக்பாஸில் ஏற்பட்ட அனுபவம் தான் போல.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!