ஐஸ்வர்யாவை அடித்தார் சென்ட்ராயன்

பொம்மலாட்டம் டாஸ்க்கில் இன்று சென்றாயனுக்கும் ஐஸ்வர்யாவுக்கு முட்டிக்கொள்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் பிரோமோவில் பொம்மலாட்டம் டாஸ்க் தான் தொடர்ந்து நடப்பது போல காட்டப்படுகிறது. இந்த டாஸ்க்கில் யாஷிகா அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இந்த அணியின் ஐஸ்வர்யாவுக்கும் எதிரணியின் சென்றாயனுக்கும் முட்டிக் கொள்கிறது.

ஐஸ்வர்யா எதிரணியின் பொருட்களை தூக்கிப் போடுகிறார். அதனை கேட்க வந்த சென்றாயனிடம் அவர் காட்டமாக பேசுகிறார். கோபமான சென்றாயன், ஐஸ்வர்யாவின் முடியை பிடித்து இழுக்கிறார்.

முன்னதாக சர்வாதிகாரி டாஸ்க்கில், பொன்மன்பலம் தன்னை நீச்சல் குளத்தில் தள்ளிவிட்ட போது கத்தியது போலவே ஐஸ்வர்யா கத்துகிறார். ஏன் பிசிக்கல் வைலன்ஸ் பண்றீங்க என்று சென்றாயனிடம் யாஷிகா வாக்குவாதத்தில் ஈடுபட்டுகிறார். ஒரு வழியாக பிக்பாஸ் எதிர்பார்த்தது நடந்துவிட்டது.

Sharing is caring!