ஐஸ்வர்யா ராய் கர்ப்பமா?

ஐஸ்வர்யா ராய் பச்சன் கர்ப்பமாக இருப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கோவாவுக்கு சென்றுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் எல்லாம் மும்பையில் ஹோலி பண்டிகையை கொண்டாட அவர்களோ கோவாவுக்கு சென்றுள்ளனர்.

அங்கு கடற்கரையில் ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் நடந்து சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியானது.

ஐஸ்வர்யா

புகைப்படத்தை பார்த்தவர்கள் ஐஸ்வர்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளார் என்று பேசத் துவங்கிவிட்டனர். ஐஸ்வர்யாவின் வயிறு சற்று பெரிதாக தெரிவதால் கர்ப்பம் என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

டிசைனர் உடை

ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இல்லை அது தொப்பை. டிசைனர் உடைகள் அணிந்து தொப்பையை மறைத்து வருகிறார். தற்போது அது தெரிந்துவிட்டது என்று சிலர் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.

உடல் எடை

கேன்ஸ் திரைப்பட விழா வருகிறது. ஐஸ்வர்யா கர்ப்பம் என்பதால் மேலும் குண்டாகிவிடாமல் இருக்க வேண்டும் என்று சிலர் தங்களின் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

நடிகை

ஐஸ்வர்யா ராய் தொப்பை வைத்திருப்பது ஒரு குற்றமா?. அவர் வெயிட் போடுவதும், போடாமல் இருப்பதும் அவர் இஷ்டம். உடல் எடை தொடர்பாக ஐஸ்வர்யா அடிக்கடி விமர்சிக்கப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!