ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யா வீடு திரும்பினர்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த பொலிவூட் சினிமாவின் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆரத்யா ஆகியோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன் பின்னர், மக்களின் தொடர்ச்சியான பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவிப்பதாக அபிஷேக் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட அபிஷேக் பச்சன் மற்றும் அவரது தந்தையான அமிதாப் பச்சன் ஆகியோர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Sharing is caring!