ஐஸ்வர்ய லட்சுமி – பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்

மலையாள திரையுலகில் சமீபகாலமாக முன்னேறி வரும் இளம் நாயகி தான் ஐஸ்வர்ய லட்சுமி. வரிசையாக இவர் நடித்த படங்கள் ஹிட்டாக, சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் ‘வரதன்’ படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தநிலையில் இவர் ஆறு வருடங்களுக்கு முன் விளையாட்டாக செய்தது இப்போது இவருக்கு சங்கடத்தை தேடிக்கொண்டு வந்துள்ளது.

ஆறு வருடங்களுக்கு முன் தனது பேஸ்புக் பக்கத்தில், பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் மற்றும் நடிகர் பிருத்விராஜ் நடித்த ஔரங்கசீப் படத்தில் இடம்பெற்ற இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு பிருத்விராஜை ராஜப்பன் (கரடு முரடானவன்) என குறிப்பிட்டு டேமேஜ் கண்டிசனில் இருக்கிறார் எனவும், அர்ஜுன் கபூரை பார்க்கவே ஆள் ஹாட் ஆக இருக்கிறார் எனவும் குறிப்பிட்டிருந்தார். அப்போது அவர் அர்ஜுன் கபூர் ரசிகையாம்..

ஆனால் அந்த பேஸ்புக் பதிவை யாரோ எடுத்து இப்போது சோஷியல் மீடியாவில் உலவ விட்டுள்ளார்கள். இதனால் கோபமான பிருத்விராஜ் ரசிகர்கள் ஐஸ்வர்ய லட்சுமியை காய்ச்சி எடுத்து வருகிறார்கள். ஆனால் அது அப்போது ஏதோ விளையாட்டாக பண்ணியது, அதை பெரிது படுத்த வேண்டாம் என ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் ஐஸ்வர்ய லட்சுமி.

Sharing is caring!