ஐ.நா.,வில் திரையிடப்படும் இந்திய படம்

நியூயார்க்: பாலியல் தொழிலுக்காக பெண் குழந்தைகள் கடத்தப்படுவதை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட, லவ் சோனியா. தப்ரேஸ் நூரானி இயக்கத்தில் மனோஜ் பாஜ்பாய், ராஜ்குமார் ரவ், ரிச்சா சத்தா, அனுபம் கெர், பரிட்டா பின்டோ, முருனல் தக்குர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நைல்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளனர். இப்படம், அடுத்த மாதம், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள, ஐ.நா., அலுவலகத்தில் திரையிடப்படுகிறது.

இதுகுறித்து படத்தின் இயக்குனர் தப்ரேஸ் நுாரானி கூறியதாவது : ஐ.நா.வில் திரையிடப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. வாங்கிய கடனை அடைப்பதற்காக, தந்தையால் விற்கப்பட்ட இந்திய கிராமத்து இளம் பெண், பாலியல் தொழிலில் தள்ளப்பட்டதை மையமாக வைத்து, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

Sharing is caring!