‘ஒடியன்’ வெளியாகியது

மோகன்லால் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று வெளியான படம் ‘ஒடியன்’ இந்தப்படம் வெளியான முதல் வசூல் ரீதியாகவும், தியேட்டர்களின் எண்ணிக்கையிலும் பல புதிய சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் நேற்று திடீரென ஒரு கட்சியினர் பந்த் நடத்தியதால் ஒடியன் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாம்.

குறிப்பாக போராட்டக்காரர்களின் மிரட்டலுக்கு பயந்து நேற்று பல தியேட்டர்கள் பகல் காட்சிகளை ரத்து செய்தன. ரசிகர்கள் காட்சிகள் மட்டும் ஓரளவுக்கு தடையில்லாமல் நடைபெற்றனவாம். அதுமட்டுமின்றி படமும் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்பை அவ்வளவாக பூர்த்தி செய்யவில்லை என பரவிய செய்திகளும் கூட படத்தை பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Sharing is caring!