ஒத்துக் கொள்வாரா? மறுப்பாரா? பாலிவுட் எதிர்பார்த்துள்ளது!

ஐதராபாத்:
பாலிவுட்டில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாக நடிகர் பிரபாஸ் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபாஸ் ஒரே ஒரு படம் மூலம் இந்திய ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர். பாகுபலி என்ற படத்திற்காக 5 வருடங்கள் உழைத்திருக்கிறார். இவரது நடிப்பு, புகழ் எல்லாமே படத்தால் உயர்ந்துள்ளது.

தற்போது பிரபாஸுக்கு ரூ. 1000 கோடி பட பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது. அதாவது பாலிவுட்டில் மகாபாரதா என்ற படம் தயாராக இருக்கிறது, இதில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தில் வரும் அர்ஜுன் கதாபாத்திரத்துக்காக அமீர்கான், பிரபாஸை கேட்டுள்ளாராம். ஆனால் அவரோ இன்னும் பதில் அளிக்கவில்லையாம்.

முகேஷ் அம்பானி தயாரிக்கும் இந்திய சினிமாவின் பெரிய பட்ஜெட் படமான மகாபாரத படத்தின் படப்பிடிப்பு ஏற்கெனவே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!