‘ஒத்த செருப்பு சைஸ் 7’ போட்டிக்கான கேள்வியை அறிவித்தார் பார்த்திபன்

வாக்களீப்பீர் ஒத்த கால் செருப்புக்கு’ என தனது படத்தின் அறிவிப்பை துவங்கியுள்ளார், இயக்குனரும், நடிகருமான பார்த்திபன். இந்த படத்திற்கு, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார் என்ற தகவலையும் “அரசியல் கூட்டணி போல், மானம் மரியாதைக்கு விடுமுறை கொடுத்து கூட்டணி அமைப்பதைப் போல் இல்லாமல், இப்படத்தில் தான் அமைத்திருக்கும் கூட்டணி வெற்றி வாய்ப்பு உறுதி செய்யும் கூட்டணி” என அறிமுகம் செய்தார்.

இதனையடுத்து, டப்பிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்திற்கான அறிமுக விழாவில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு, போட்டி ஒன்றை ட்விட் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், செருப்பு பற்றிய சிறப்பை, 7 வ‌ரிகளில் எழுதி #OS7 CONTEST என்ற‌ Hashtag உடன் பதிவு செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் போட்டியாளர் ஒத்த செருப்பு பட அறிமுக விழாவில் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!