ஒன்று கூடும் மோகன்லால் – மம்முட்டி

மம்முட்டி, மோகன்லால் அளவுக்கு இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க முடியாது என்பதை நடிகர் ஜெயராம் நன்றாகவே உணர்ந்துள்ளார். அதனால் தான், கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியான ‘பஞ்சவர்ண தத்த’ என்கிற படத்தில் தொந்தியும் மொட்டைத் தலையுமான ஒரு கெட்டப்பில் நடித்திருந்தார்.

அதேப்போல அடுத்ததாக ‘கிராண்ட் பாதர்’ என்கிற படத்தில் வயதான கேரக்டரில் நடிக்க இருக்கிறார் ஜெயராம். இந்தப்படத்தின் துவக்கவிழா வரும் டிச-3ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்தப்படத்தை ஒன்றாக வந்து துவங்கி வைக்கும்படி மம்முட்டி, மோகன்லால் இருவருக்கும் அழைப்பு விடுத்து அவர்கள் சம்மதத்தையும் வாங்கிவிட்டார் ஜெயராம்.

Sharing is caring!