ஒரிஜினில் பிரியா வாரியார் இவர் இல்லையாம்! ரசிகர்கள் அதிர்ச்சி – புகைப்படம் உள்ளே

சமீபத்தில் இளைஞர்களின் இதயதுடிப்பாக மாறியவர் பிரியா வாரியார். காரணம் அந்த ஒரு கண் அசைவுகள் தான். ஒரு அடார் லவ் தான் எல்லாவற்றிற்கும் மூலம் என சொல்லலாம்.

இவர் ஒரே நாளில் முகம் தெரிந்த பிரபலமாகிவிட்டார். சினிமா பிரபலங்களுக்கு கூட இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்றால் சந்தேகம் தான். ஆனால் இளம் பெண்கள் மத்தியில் அவர் மீது கொஞ்சம் பொறாமை தான்.

ஆனால் அந்த கண் அசைவை மூன்று வருடங்களுக்கு முன்பே போஜ்புரி சினிமா நடிகை அமராபாலி துபே செய்துவிட்டாராம். கடந்த 2015 ல் வெளியாகி ஹிட்டான Raja Babu படத்தின் Matha Fail Ho Gail பாடலில் அது இடம் பெற்றுள்ளது. இதில் பிரபல நடிகர் தினேஷ் லால் யாதவ் நடித்திருக்கிறார்.

Sharing is caring!